நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் விஜய் செய்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்காற்றிய சங்கீதா, தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் மீது வைக்கப்பட்ட சில தனிப்பட்ட புகார்கள் மற்றும் அண்மைக்காலமாக நடிகை திரிஷாவுடன் இணைத்து பேசப்பட்ட சர்ச்சைகள் எனப் பல காரணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 20-ம் தேதி விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், விஜய்யும் சங்கீதாவும் மறைந்த நடிகர் விஜயகாந்துடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை சட்டமிட்டு (Frame) கொண்டு வந்திருந்தார்.
கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் அந்தப் புகைப்படத்தைக் கவனித்த விஜய், அதை வாங்கிச் சில நொடிகள் உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒருவித 'ஏக்கம்' தெரிந்ததாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
பின்னர் அந்தப் புகைப்படத்தைத் தனது பாதுகாவலரிடம் கொடுத்து, காரில் பத்திரமாக வைக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
இந்தக் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. "சங்கீதாவுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பதே விஜய்யின் அடிமனது விருப்பமாக இருக்கிறது" என ரசிகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

