தமிழக காவல்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றமாக முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பலரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, தென்காசி, திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.க்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய இடமாற்றங்களின் விவரம் பின்வருமாறு

  • சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு: புதிய ஐ.ஜி-யாக செந்தில்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருச்சி மாவட்டம்: புதிய எஸ்.பி-யாக டோங்கரே பிரவின் உமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • தென்காசி மாவட்டம்: கோவை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த எஸ். அசோக் குமார், தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு: திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த வி. சியாமளா தேவி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்.பி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

நிர்வாக நலன் கருதி சில அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன:

  • திருப்பத்தூர் மாவட்டம்: பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட புதிய எஸ்.பி-யாக அக்ஷய் அனில் வாகரே நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பெரம்பலூர் மாவட்டம்: பதவி உயர்வுடன் பெரம்பலூர் மாவட்ட புதிய எஸ்.பி-யாக டாக்டர் வி. லலித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பலப்படுத்தவும் இந்த அதிரடி இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.