தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முழுமையான தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16, 2026) சென்னையில் வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முக்கிய நிகழ்வு அரங்கேறியது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய், அதன் முதல் பிரதியை மேடையில் இருந்த ஒரு மூத்த விவசாயியிடம் வழங்கினார்.

  • அந்த விவசாயி விஜய்க்கு நெல் மணிகளை அன்பளிப்பாக வழங்கினார்.

  • அதனை நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட விஜய், விவசாயிக்குச் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

தனது உரையில் கட்சியின் கொள்கை மற்றும் தேர்தல் அறிக்கையின் நோக்கம் குறித்து விஜய் விளக்கமளித்தார்:

"தமிழ்நாட்டின் முதல் பெருமை நம் மொழி; மொழியின் முதல் பெருமை திருக்குறள். அறம், பொருள், இன்பம் ஆகிய திருக்குறள் நெறிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது."

வழக்கமான அரசியல் கட்சிகளிடமிருந்து தவெக எவ்வாறு வேறுபடுகிறது என்பதை விஜய் தனது பேச்சில் கோடிட்டுக் காட்டினார்:

திமுக, அதிமுக போல் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிட மாட்டோம்; எதைக் செய்ய முடியுமோ அதை மட்டுமே அறிக்கையில் கூறியுள்ளோம்."

"இந்த விஜயை நீங்கள் 100% நம்பலாம்" எனத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஆவேசமாக உரையாற்றினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜய்யின் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியீடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களான விவசாயிகளை முன்னிலைப்படுத்தி அறிக்கை வெளியிட்டது அரசியல் நோக்கர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

த.வெ.க.வின் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தளபதி விஜய்.

- சாத்தியமானவற்றையே தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. வழங்குகிறது

- 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500

- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்

- மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை

- தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள்

- ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கு உத்தரவாதம்

- போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு

- குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீட்டு திட்டம்

- வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000

- டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2,500

- 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்

- 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

- கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்