தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் சூறாவளிப் பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து, தொகுதிக்குத் தொடர்பில்லாத வெளி நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் தொகுதிகளிலும், முக்கிய இடங்களிலும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
வில்லிவாக்கத்தில் பிரசாரத்தைத் தொடங்கி, தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
தனது கோட்டையான சேலத்தில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, அங்கு தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.
சென்னையில் நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் சாலைவலம் (Road Show) மேற்கொண்டார். பின்னர் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான கட்டுப்பாடுகள்
இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக எந்தவிதமான தேர்தல் பிரசாரங்களையும் மேற்கொள்ளக் கூடாது.
தொகுதியின் வாக்காளர் அல்லாத, வெளிமாவட்டங்களில் இருந்து வந்த கட்சியினர் அனைவரும் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் அல்லது மக்களைக் கூட்டும் எந்தவொரு நிகழ்வு மூலமும் வாக்கு சேகரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்திற்காக வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன
கடந்த ஒரு மாத காலமாகத் தமிழக அரசியலில் நிலவி வந்த பரபரப்பு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

