நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
மொத்தம் 4,023 வேட்பாளர்களில், 3,992 பேரின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 722 பேர் (18%) தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
404 பேர் (10%) தங்கள் மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 13% ஆக இருந்த குற்றப்பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை, தற்போது 18% ஆக உயர்ந்துள்ளது. இது 5% அதிகரிப்பாகும்.
ஆய்வு செய்யப்பட்ட முக்கியக் கட்சிகளில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விகிதம் வருமாறு:
அரசியல் கட்சிகுற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிமுக 69% , காங்கிரஸ்50% ,பாமக50% , பாஜக48% , தவெக40% ,திமுக40% ,நாம் தமிழர் கட்சி25%
தீவிர குற்றங்கள் மற்றும் வழக்குகள்:
வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள தகவல்களின்படி:
கொலை வழக்குகள்: 13 பேர்.
கொலை முயற்சி வழக்குகள்: 44 பேர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 18 பேர்.
கடுமையான குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் (கட்சி வாரியாக):
அதிமுக: 35% (60/170)
பாமக: 33% (6/18)
பாஜக: 27% (9/33)
தவெக: 19% (43/231)
திமுக: 18% (32/175)
காங்கிரஸ்: 18% (5/28)
சிபிஐ: 20% (1/5)
தேமுதிக: 10% (1/10)
இந்த அறிக்கை, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் உரிய கவனம் செலுத்துவதில்லை என்ற விவாதத்தை மீண்டும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

