சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்கள் வழமைக்கு மாறாக நகைச்சுவை கலந்த ஆதங்கத்துடன் உரையாற்றியுள்ளார்.
அவர் கூறியதாவது கடந்த 15 ஆண்டுகளாகத் தான் அரசியலில் கத்திக் கொண்டிருப்பதாகவும், இது ஒரு 'ஒருதலைக் காதல்' போலவே நீடிப்பதாகவும் சீமான் தெரிவித்தார்
மக்களுக்கு என் காதல் மட்டும் மக்களுக்குப் புரிந்துவிட்டால் நான் வென்றுவிடுவேன், ஆனால் மக்கள் என்னைக் கண்டுகொள்வதில்லை என அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம்
ஏனைய அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகளைச் சாடிய அவர், தானும் அவர்களைப் போல ஏமாற்றலாம் என நினைப்பதாகக் கூறி சில வேடிக்கையான வாக்குறுதிகளை வழங்கினார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு உலங்கு வானூர்தி வழங்கப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு தலா ஒரு கிலோ தங்கம் மற்றும் புதுமணப் பெண்களுக்கு ஒரு கிலோ வைரம் வழங்கப்படும்.அதைவிட மணமக்கள் விரும்பிய நாட்டுக்குத் தேனிலவு செல்ல ஏற்பாடு செய்யப்படும்."மற்றவர்கள் 2,000 ரூபாய் தருகிறோம் என்று சொன்னால் நம்பும் மக்கள், நான் ஹெலிகாப்டர் தருகிறேன் என்று சொன்னால் சிரிக்கிறார்கள் என அவர் கலகலப்பாகக் குறிப்பிட்டார்.
கிண்டலாகப் பேசிய பின்னர் தீவிரமான தொனிக்கு மாறிய சீமான், இதுபோன்ற இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தனது ஆட்சியில்,வீட்டிற்கு இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
தமிழகத்தில் வட இந்தியர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு உறுதி செய்யப்படும்.
மது விற்பனை முற்றாக ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பனம்பால் மற்றும் தென்னம்பால் விற்பனை ஊக்குவிக்கப்படும் .இவ்வாறாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் உரை இடம்பெற்றிருந்தது.

