மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் அங்கமாக இருந்தபோதிலும், இந்த முறை தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த கமல் ஹாசன்

  • திமுக கூட்டணியில் தாங்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை கிடைக்காதது.

  • விருப்பப்பட்ட தேர்தல் சின்னம் அமையாதது.

ஆகிய காரணங்களினால் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஆதரவு வழங்க மட்டும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார்

அதன்படி திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 17 முதல் 4 நாட்களுக்கு 20 தொகுதிகளில் கமல் ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.