அமெரிக்காவின் முன்னணி பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பிரிட் (Spirit Airlines), நிதி நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாகத் தனது சேவைகளை முழுமையாக நிறுத்திக்கொள்வதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மே 2, 2026 முதல் ஸ்பிரிட் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன,மேற்காசியப் போர் காரணமாக ஜெட் எரிபொருள் விலை அதீதமாக உயர்ந்தது மற்றும் நீண்டகாலமாக நீடித்து வந்த நிதி நெருக்கடியே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது,நிறுவனத்தின் இந்த முடிவால் 14,000 நேரடிப் பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் என மொத்தம் சுமார் 17,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது,ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், அவர்கள் மாற்று விமான சேவைகளை நாடிக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது,கடந்த 34 ஆண்டுகளாக மலிவு விலையில் முன்மாதிரியான சேவையை வழங்கியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மிகுந்த ஏமாற்றத்துடன் இந்த முடிவை அறிவிக்கிறோம்." - ஸ்பிரிட் விமான நிறுவனம்.

ஸ்பிரிட் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கனவே இரண்டு முறை திவால் நிலையை அறிவித்திருந்தது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு நிறுவனத்தின் நிலையை மேலும் மோசமாக்கியது. டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து நிறுவனத்தை மீட்க எடுத்த முயற்சிகளைத் கடன் வழங்குவோர் நிராகரித்ததால், வேறு வழியின்றி நிறுவனம் மூடப்படுவதாகத் தெரிகிறது.

அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையில் மலிவு விலை பயணங்களுக்குப் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்தின் இந்த முடிவு, பயணிகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.