மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருவதால், எதிர்வரும் மே - ஜூலை 2026 காலப்பகுதியில் 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் மீண்டும் உருவாகக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழல், உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் உலகளாவிய விவசாயத் துறைக்கு, இந்த எல் நினோ வருகை ஒரு பேரிடியாக அமையுமெனக் கருதப்படுகிறது.
பல்வேறு சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் தொகுப்பு இதோ:
ஜப்பான் வானிலை ஆய்வு மையம்வட அரைக்கோள கோடைகாலத்தில் எல் நினோ உருவாக 70% வாய்ப்பு உள்ளது.
சீன அதிகாரிகள்இந்த காலநிலை மாற்றம் 2026-ம் ஆண்டின் இறுதி வரை நீடிக்கக்கூடும்.
இந்திய வானிலை ஆய்வுமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இயல்பை விடக் குறைவான பருவமழை பெய்ய வாய்ப்பு.
மலேசிய அதிகாரிகள் வறண்ட வானிலையினால் பாம் எண்ணெய் உற்பத்தி 5% முதல் 12% வரை குறையக்கூடும்
இந்தியா & இலங்கை: ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை 70 - 90% வரை குறையக்கூடும். குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் கடும் வறட்சி நிலவ வாய்ப்புள்ளது.
அவுஸ்திரேலியா: கடும் வெப்ப அலைகள் காரணமாக கோதுமை உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளை விவசாயிகள் ஏற்கனவே மட்டுப்படுத்தியுள்ளனர்.
சீனா: தெற்குப் பகுதிகளில் எல் நினோ விளைவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், அரிசி மற்றும் காய்கறித் தோட்டங்கள் பாதிக்கப்படலாம்.
அமெரிக்கா & ஐரோப்பா: அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ள போதிலும், அறுவடை காலத்தில் பெய்யும் தேவையற்ற மழையினால் தானியங்களின் தரம் குறையக்கூடும்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய யூரியா வர்த்தகத்தின் முக்கியப் பாதையான 'ஹோர்முஸ்' நீரிணை (Strait of Hormuz) போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உர விநியோகம் தடைப்பட்டு விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
"மத்திய கிழக்கு மோதல்களால் உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், வறட்சியால் விளைச்சல் குறையும் என்ற அச்சத்தில் விவசாயிகள் அதிக முதலீடு செய்யத் தயங்குவார்கள். இது விளைச்சலை மேலும் குறைத்து ஒரு நச்சுச் சுழற்சியை (Vicious Cycle) உருவாக்கும்."
எல் நினோ (El Nino) என்பது பசுபிக் சமுத்திரத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதைக் குறிக்கும் ஒரு இயற்கை நிகழ்வாகும்.
செயல்பாடு: சாதாரண காலங்களில் வீசும் வர்த்தகக் காற்றுகள் பலவீனமடைவதால், கடலின் வெப்பமான நீர் ஆசியாவை விட்டு விலகி தென் அமெரிக்காவை நோக்கி நகர்கிறது.
விளைவு: இதன் காரணமாக இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடுமையான வறட்சியும், தென் அமெரிக்க நாடுகளில் அதிக மழையும் ஏற்படுகிறது.
தாக்கம்: இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதுடன், பூமியின் சராசரி வெப்பநிலையை உயர்த்துவதற்கும் காரணமாகிறது.

