செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அது அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் பறித்துவிடாது என்றும், குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுவோருக்கு மட்டுமே சவாலாக இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் சில குறிப்பிட்ட பணிகளை மனிதர்களை விட AI மிகச் சிறப்பாகச் செய்கிறது. குறிப்பாக

  • தரவு செயலாக்கம் (Data Processing): கணினி தரவுகளைக் கையாளுதல்.

  • அடையாளம் காணுதல்: வடிவம் மற்றும் தோற்றங்களை (Pattern Recognition) கண்டறிதல்.

  • உள்ளடக்க உருவாக்கம்: புதிய உள்ளடக்கங்களை உருவாக்குதல் (Generative AI).

  • மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகள்: ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும் (Repetitive Tasks) பணிகளில் இருப்பவர்களுக்கு AI ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

எவ்வளவு முன்னேறினாலும், தற்போதைக்கு நான்கு வகையான பணிகளைச் செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியாது எனக் கணக்கிடப்பட்டுள்ளது:

  1. உணர்வுப்பூர்வமான பணிகள்: மனோதத்துவ நிபுணர்கள், மன அழுத்தத்திற்குச் சிகிச்சை அளிப்போர் மற்றும் மனித உணர்வுகளைக் கையாளுவோர்.

  2. சுகாதாரத் துறை: மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபி நிபுணர்களுக்கு AI மாற்றாக முடியாது.

  3. கைவினை மற்றும் உடல் உழைப்பு: எலக்ட்ரீஷியன், பிளம்பர் மற்றும் மெக்கானிக் போன்ற உடல் உழைப்புடன் மூளைத் திறனை இணைத்துச் செய்யும் வேலைகள்.

  4. புத்தாக்கம் மற்றும் கொள்கை உருவாக்கம்: வழக்குரைஞர்கள், நிறுவனத் திட்ட வகுப்பாளர்கள், கொள்கை உருவாக்குவோர் மற்றும் புதிய தகவல்களை உருவாக்கும் புத்தாக்க நிபுணர்கள்.

மாணவர்களுக்கு ஆலோசனைகள்

பட்டப்படிப்பு படிக்கும் இளைஞர்கள் AI-ஐக் கண்டு பயப்படத் தேவையில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக, கீழ்க்கண்ட யுக்திகளைப் பின்பற்றலாம்:

"ஒரு வேலையைச் செய்யும் முன் இது மனிதர்களால் மட்டுமே முடியுமா அல்லது இயந்திரத்தால் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள்.

இயந்திரத்தால் செய்ய முடியும் என்றால், அந்தப் பணிக்கு AI மாற்றாக வரும் என்பதை உணர்ந்து உங்கள் படிப்பைத் தேர்வு செய்யுங்கள்."

  • பயிற்சி: AI-ஐக் கண்டு அஞ்சுவதை விட, AI-ஐக் கொண்டு வேலை வாங்கும் திறனை (AI Management) வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  • திறன் மேம்பாடு: AI இன்னும் எட்டாத துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் நிபுணத்துவம் பெறலாம்.

எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையில் நிலைத்து நிற்க, தொழில்நுட்பத்தோடு இணைந்து பயணிப்பதே புத்திசாலித்தனம் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.