தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், சித்திரைத் திருநாளான அன்று தனது பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 3-ம் தேதி ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தமிழ் வருடப்பிறப்பான கடந்த (ஏப்ரல் 14), தனது மகளுக்கு 'கிரியா ஹரிஷ்' (Kriya Harish) எனப் பெயர் சூட்டியுள்ளதாக ஹரிஷ் அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் பெயரைப் பகிர்ந்துள்ள அவருக்கு, திரையுலக நண்பர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
சிந்து சமவெளி' படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.இவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்த 'பியார் பிரேம காதல்' படத்தைத் தொடர்ந்து, 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'ஓ மணப்பெண்ணே', 'தாராளபிரபு' போன்ற படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
டைசியாக இவர் நடிப்பில் 'டீசல்' திரைப்படம் வெளியானது. தற்போது வினீத் வரபிரசாத் இயக்கத்தில் 'தாஷமக்கான்' படத்திலும், 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்து முடித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நர்மதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஹரிஷ் கல்யாண், தற்போது தந்தை என்ற புதிய பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளார்.

