24 Tamil News
India / இந்தியா

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் பரபரப்பு

Thivarakar

editor

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் பரபரப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு தனது பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார்.

மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது பிரத்யேக பிரச்சார வாகனத்தில் பயணம் செய்த விஜய்யைக் காண, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டனர். அவரது வாகனத்தைச் சூழ்ந்தபடி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்நிலையில், மதுரை - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலை தடுப்புச் சுவரில் (Divider) மோதியது

.

இந்தக் கோர விபத்தில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய் செல்லும் வழியெங்கும் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.