நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா, பதவியேற்ற ஒரே மாதத்தில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா, முதற்கட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தார்.இருதரப்பு வழக்கறிஞர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமுகமான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.தேர்தல் பணிகள் காரணமாக இருவரும் காணொளிக் காட்சி (Video Call) வழியாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி நடக்கவிருந்த விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சசிகலா திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

  • வழக்கமாக ஒரு நீதிபதி மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றுவது நடைமுறை என்ற நிலையில், ஒரே மாதத்தில் அவர் மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இருந்த நீதிபதி சுஜாதா மீண்டும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள அடுத்த விசாரணையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.