தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை த்ரிஷா அவருடன் இணைந்து கேக் வெட்டி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், பிரபல முன்னணி நடிகையுமான த்ரிஷா, முதல்வருக்கு நேரில் சென்று கேக் வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்க்கு கேக் பரிசளித்து, அவருடன் அமர்ந்திருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தை த்ரிஷா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.





