அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வைகைச்செல்வன் உள்ளிட்ட 15 பேரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் நியமித்துள்ளார்.

இதுகுறித்து தவெக தலைவர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியப் பொறுப்பு: கட்சியில் புதிதாக இணைந்துள்ள 15 பேர் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில் 11 பேர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைப் பொதுச் செயலாளர்கள் பட்டியல்:

  • முன்னாள் அமைச்சர்கள்: வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, வைகைச்செல்வன், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி. சம்பத், கே. ராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், எம். ஆனந்தன், கே.டி. பச்சைமால், என்.ஆர். சிவபதி.

  • நிர்வாகிகள்: ஜே. சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூர் கண்ணன், வி.சி.ஆர். குமரன்.

மாவட்டச் செயலாளராக சி.மகேந்திரன் நியமனம்: மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த சில மணிநேரத்திலேயே, முன்னாள் எம்பி-யான சி. மகேந்திரன் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.