தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய முகமாக அறியப்பட்ட அஜிதா ஆக்னல், இன்று அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னிலையில் அவர் முறைப்படி கட்சியில் இணைந்துகொண்டார்.