தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பின்வரும் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

  • கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை.

  • தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்.

  • திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர்.

  • தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி.

தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகத்தின் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இன்று குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

மேலும், மழை பெய்யும் சமயங்களில் தரைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.