தெற்கு உள்கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை தமிழகம் வழியாக சுமார் 1.5 கி.மீ உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்றைய வானிலை (செப்டம்பர் 14): தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
நீலகிரி
கோயம்புத்தூர்
தேனி
திண்டுக்கல்
ஈரோடு
கிருஷ்ணகிரி
தர்மபுரி
சேலம்
திருப்பத்தூர்
திருச்சிராப்பள்ளி
பெரம்பலூர்
அரியலூர்
கடலூர்
தஞ்சாவூர்
திருவாரூர்
மயிலாடுதுறை
ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு (செப்டம்பர் 15): நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான நிலவரம்: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: 34°C - 35°C
குறைந்தபட்ச வெப்பநிலை: 25°C - 26°C





