தமிழக காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், அதிநவீன ஆயுதங்கள், ட்ரோன்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மற்றும் ரோந்து வாகனங்கள் வாங்க ₹212.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசின் உள்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதிநவீன ஆயுதக் கொள்முதல் (ரூ. 3.33 கோடி)
தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நவீன ஆயுதங்கள் வாங்கப்படவுள்ளன:
ஸ்னைப்பா் துப்பாக்கிகள்: பகல் மற்றும் இரவு நேர பார்வை வசதியுடன் கூடிய 12 ஸ்னைப்பா் ரைபிள்கள்.
அசால்ட் ரைபிள்கள்: 30 பல்கேரியன் 7.62 மி.மீ. அசால்ட் ரைபிள்கள் மற்றும் 50 சாதாரண ரைபிள்கள்.
மற்ற ஆயுதங்கள்: 10 கையெறி குண்டு ஏவிகள் (Grenade Launchers), 10 லைட் மெஷின் கன்கள் (LMG), 3 'காா்னா் ஷாட்' அமைப்புகள், 50 'கிளாக்-17' பிஸ்டல்கள் மற்றும் பயிற்சிக்காக 50 பெயிண்ட்பால் துப்பாக்கிகள்.
நவீன ட்ரோன்கள் & கண்காணிப்பு கருவிகள்
வெப்பப் படிம கேமரா ட்ரோன்கள்: ரூ.1.18 கோடியில் வெப்பப் படிமங்களை (Thermal Imaging) பதிவு செய்யும் கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கிகளுடன் கூடிய 4 ட்ரோன்கள்.
அதிவிரைவுப் படை ட்ரோன்கள்: ரூ.2.07 கோடியில் 4 அதிநவீன ட்ரோன்கள்.
தஞ்சாவூா் ஸ்மார்ட் கண்காணிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்,
பட்டுக்கோட்டை, திருவையாறு பகுதிகளில் ஸ்மார்ட் கண்காணிப்பு திட்டத்தின்க கீழ் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் அமைக்க ரூ.15.67 கோடி ஒதுக்கீடு.
வெடிகுண்டு தடுப்புப் பிரிவு & பாதுகாப்பு அம்சம்
பாம் சூட்கள் (Bomb Suits): சர்வதேச தரச்சான்று பெற்ற 7 அதிநவீன பாம் சூட்கள் ரூ.3.50 கோடியில் கொள்முதல்.
தகவல் தொடர்பு: 4ஜி மற்றும் 5ஜி அலைவரிசையில் இயங்கும் 200 அதிநவீன வாக்கி-டாக்கிகள், 50 வாகன டாஷ் கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கண்காணிப்பு கருவிகள்.
புதிய வாகனங்கள் & டிஜிட்டல் தடயவியல்
500 புதிய ஜீப்கள்: அவசரகால காவல் சேவையை வலுப்படுத்த ரூ.55 கோடியில் 500 புதிய ரோந்து ஜீப்கள்.
நகரும் தடயவியல் வாகனங்கள்: சிபிசிஐடி-இன் டிஜிட்டல் தடயவியல் திறனை மேம்படுத்த ரூ.22.87 கோடியில் 22 நகரும் புலனாய்வு வாகனங்கள்.
மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு: 46 சைபா் குற்றப்பிரிவு மற்றும் 877 காவல் நிலையங்களில் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு வசதி அமைக்க ரூ.11.59 கோடி.
நிதியொதுக்கீடு - ஒரு பார்வையில்
துறை / பிரிவுஒதுக்கப்பட்ட நிதிதகவல் தொடா்பு சாதனங்கள்₹99.03 கோடிஅவசரகால ரோந்து வாகனங்கள்₹55.00 கோடிகண்காணிப்பு சாதனங்கள்₹30.51 கோடிபாதுகாப்பு சாதனங்கள்₹11.28 கோடிஆயுத கொள்முதல்₹3.33 கோடி





