தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வரும் மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு

மே 1 மற்றும் 2-ம் தேதிகளில், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், தென் மற்றும் மேற்குத் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் வெயில் நிலவும். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40°C-ஐ கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலூரில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி பதிவான 42°C வெப்பநிலையை மீண்டும் எட்டும் வாய்ப்பு உள்ளது.

ஆந்திராவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடற்கரையை ஒட்டிய மிக அருகாமையில் உள்ள பகுதிகள் மட்டுமே ஓரளவு வெப்பத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

ஆந்திராவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடற்கரையை ஒட்டிய மிக அருகாமையில் உள்ள பகுதிகள் மட்டுமே ஓரளவு வெப்பத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

KTCC மற்றும் வட தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக:

  • நேரம்: மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மக்கள் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • முன்னெச்சரிக்கை: வெளியே செல்லும் போது கட்டாயம் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்லவும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.