தமிழகத்தில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழைக்கும், மற்ற பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியமான சூழலுக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 0.9 கி.மீ உயரத்தில், கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை, கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலுங்கானா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இன்று முதல் ஏப்ரல் 22 வரை:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்.
டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள்,ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை மற்றும் அசௌகரியம் குறித்த எச்சரிக்கை
"அதிக வெப்பநிலையும், காற்றில் அதிக ஈரப்பதமும் நிலவுவதால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் மக்கள் உடல் ரீதியாக அசௌகரியங்களை உணரக்கூடும்."
வரும் 22-ம் தேதி வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது, எனினும் ஒரு சில இடங்களில் வெப்பம் சற்று உயர வாய்ப்புள்ளது.
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36°C முதல் 37°C வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C ஒட்டியும் இருக்கும்.
அதிக ஈரப்பதம் காரணமாக சென்னையில் புழுக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படலாம்.
வெயில் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், மதிய நேரங்களில் வெளிப்புற வேலைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

