தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிர்வாக ரீதியான முக்கிய மாற்றங்களை முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக, நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
திரு. உதயச்சந்திரன் ஐஏஎஸ் முந்தைய பொறுப்பு நிதித்துறைச் செயலாளர்மேலாண் இயக்குநர், புதிய பொறுப்பு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
திரு. குமார் ஜெயந்த் ஐஏஎஸ் முந்தைய பொறுப்பு மேலாண் இயக்குநர், தொழில் முதலீட்டுக் கழகம்தலைவர், புதிய பொறுப்பு தமிழ்நாடு காகித நிறுவனம் (TNPL)
திரு. தாரேஸ் அகமது ஐஏஎஸ் முந்தைய பொறுப்பு நிர்வாக இயக்குநர், கெய்டென்ஸ் தமிழ்நாடுசெயலாளர், புதிய பொறுப்பு சுகாதாரத் துறை
திருமதி. மரியம் பல்லவி பல்தேவ் ஐஏஎஸ் முந்தைய பொறுப்புசிறப்புச் செயலாளர், தொழில் முதலீடு மற்றும் வணிகத்துறை புதிய பொறுப்புசெயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத் துறை
திருமதி. அனு ஜார்ஜ் ஐஏஎஸ் முந்தைய பொறுப்புமுதல்வரின் தனிச்செயலர் - 3 புதிய பொறுப்பு செயலாளர், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை
புதிய அரசு பதவியேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முதல் பெரிய அளவிலான ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம், அரசு இயந்திரத்தை விரைவுபடுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீண்ட காலம் நிதித்துறையில் பணியாற்றிய உதயச்சந்திரன், தற்போது தொழில் முதலீட்டுக் கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சுகாதாரத் துறை மற்றும் சமூக நலத்துறை போன்ற மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், புதிய அரசின் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




