இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' (RKFI) நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் கடந்த ஜூன் மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு: இந்நிலையில், ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்தும் சிறப்பு வீடியோ ஒன்றை ராஜ் கமல் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இத்திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.