தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

பாசப் பிணைப்பு & அடையாளம்:

என்னுடன் பயணித்தவர்கள் அரசியல் ரீதியாக வேறு இடங்களில் இருந்தாலும் இன்றளவும் என்மீது அன்போடு இருக்கிறார்கள். அந்த பாசப் பிணைப்பின் அடையாளமாகவே அனைவரும் ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்திக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என எண்ணத் தோன்றியது.

தானும் பச்சை குத்தத் திட்டம்:

நானும் கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்தியிருப்பேன். தற்போது படப்பிடிப்பு நடப்பதால் குத்தவில்லை; படப்பிடிப்பு முடிந்ததும் என் கையிலும் அந்த முத்திரை இருக்கும்.

கட்டாயம் அல்ல - விருப்பத்தின் பேரில்:

பச்சை குத்துவது என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது, இது அனைவருக்கும் கட்டாயம் கிடையாது. மருத்துவ ரீதியாக சிலருக்கு இது ஒவ்வாமல் போகலாம். இது ஒரு 'கிரீன் கார்டு' போன்ற உணர்வை உறுதிப்படுத்தும் அடையாளம்.

தேசியப் பற்று:

பச்சை குத்துவது அந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. தேசப் பற்றின் காரணமாக நான் ஏற்கனவே எனது வலது தோள்பட்டையில் தேசியக் கொடியைப் பச்சை குத்தியுள்ளேன்.