இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் புதிய உச்சமாக, கர்நாடகாவின் புதிய முதல்வர் டி.கே. சிவகுமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று அவர் கர்நாடக முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, நாட்டின் அத்தனை மாநில முதல்வர்களையும் சொத்து மதிப்பில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இதற்கு முன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்திலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரண்டாவது இடத்திலும் நீடித்து வந்த நிலையில், தற்போது அவர்கள் அடுத்தடுத்த இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சொத்து மதிப்பில் 'டாப் 3' இந்திய முதல்வர்கள்
இந்தியாவின் டாப் 3 பணக்கார முதல்வர்களின் பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம்: டி.கே. சிவகுமார் (கர்நாடகா) – ரூ. 1,413 கோடி
இரண்டாமிடம்: சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) – ரூ. 931 கோடி
மூன்றாமிடம்: ஜோசப் விஜய் (தமிழ்நாடு) – ரூ. 648 கோடி
உண்மை நிலவரம்: டி.கே. சிவகுமார் கடந்த 2023-ம் ஆண்டு தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இடையில் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதால், அவரின் தற்போதைய நிலம் மற்றும் வணிக வளாகங்களின் சந்தை மதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
தென்னகம் Vs வடகம்: ஒரு பார்வை
தென்னிந்திய முதல்வர்களுடன் ஒப்பிடும்போது வட இந்திய மற்றும் ஹிந்தி பேசும் மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. வட மாநில முதல்வர்களின் டாப் 10 சொத்து மதிப்பை மொத்தமாகக் கூட்டினாலும், அதைவிட 10 மடங்கு அதிக சொத்துக்களை தனி ஒருவராக டி.கே. சிவகுமார் வைத்துள்ளார்.
ஹிந்தி பேசும் மாநில முதல்வர்களின் சொத்து விவரம்:
மோகன் யாதவ் (மத்திய பிரதேசம்) – ரூ. 42 கோடி
ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்) – ரூ. 25 கோடி
சம்ராத் செளத்ரி (பிகார்) – ரூ. 11 கோடி
சுக்விந்தர் சிங் சுகு (ஹிமாச்சலம்) – ரூ. 7.81 கோடி
நயாப் சிங் சைனி (ஹரியானா) – ரூ. 5.8 கோடி
ரேகா குப்தா (தில்லி) – ரூ. 5 கோடி
யோகி ஆதித்யநாத் (உத்தரப் பிரதேசம்) – ரூ. 1.54 கோடி





