தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ (Raja's Playlist) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் திரையுலகப் பயணத்தின் 50-வது ஆண்டு விழா இசை நிகழ்ச்சியில் இந்தச் சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய வாரிசுகள் இத்திரைப்படத்தின் மூலம் கைகோர்ப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்போதே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

திரையுலகில் அறிமுகமாகும் புதிய வாரிசு

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரது தம்பியும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இயக்குநராக அறிமுகமாகும் சுஜித்!

'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியன், இத்திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தில் 'கிரியேட்டிவ் தயாரிப்பாளராக' (Creative Producer) களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குழுவினர் விவரம்:

  • தயாரிப்பு: ரமணன் பாலகங்காதரன் (எலிஃபேண்டைன் நிறுவனம் - Elephantine)

  • கதை: வெங்கட் பிரபு

  • இசை: யுவன் சங்கர் ராஜா

  • இயக்கம்: சுஜித் என் சுப்ரமணியன்

  • பாடல்கள்: இயக்குநர் சுஜித், விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் நவயுகன்

பாடல்கள் வெளியீடு: இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தயாராகிவிட்ட நிலையில், மிக விரைவில் பாடல்கள் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதை, இசை, நடிப்பு என இளையராஜா குடும்பத்தின் மூன்று வாரிசுகளின் பங்களிப்பில் உருவாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.