மேற்காசியப் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக, இந்தியாவில் பல மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று அதிகாலை முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத் தலைநகர் சென்னையில் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது
லிட்டருக்கு ரூ. 2.86 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ. 95.25-க்கு விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்விற்குக் கீழ்க்கண்ட முக்கிய காரணங்களைப் பட்டியலிட்டுள்ளன:
தொடர் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள கடும் சவால்கள்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது.
எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பதாலும், பணவீக்கத்தாலும் இந்தியப் பொருளாதாரம் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது" என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், இது அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும் பொதுமக்களிடம் எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், லாரி மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறும் என்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.





