நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 5,500-ஆக குறைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையே 'சுபம்' என்ற தனியார் நிறுவனம் மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.

2.5 ஆண்டுகளில் 55,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம்

கப்பல் நிறுவனத்தின் முதன்மை வணிக அலுவலர் சிவராம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

"இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. சேவை தொடங்கப்பட்ட கடந்த இரண்டரை ஆண்டுகளில், ஆன்மீகம், சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 55,310 பயணிகள் பயணம் செய்துள்ளனர்."

பண்டிகைக் கால கட்டணச் சலுகை & லக்கேஜ் அறிவிப்புகள்

பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று பண்டிகை கால சலுகையாக இந்த புதிய கட்டணக் குறைப்பு மற்றும் லக்கேஜ் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

சலுகை விவரங்கள்பழைய அளவு / கட்டணம்புதிய சலுகை அளவு / கட்டணம்

ஒருவழி பயணக் கட்டணம்

₹6,000

₹5,500

செக்-இன் உடைமை (Check-in Luggage)

10 கிலோ

30 கிலோ

கைப்பெட்டி (Hand Luggage)

-

7 கிலோ

தொடர் சேவை உறுதி

வானிலை ஆய்வு மையம் மூலம் தீவிர எச்சரிக்கை விடுக்கப்படும் நாட்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் கப்பலைத் தடையின்றி இயக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.