நான் இங்கு அமைச்சராகப் பொறுப்பேற்று இருப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்காக மக்கள் அளித்த வாக்குகளே காரணம். தமிழக மக்களுக்காகச் சேவையாற்ற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்று தவெக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தவெக தலைவர் விஜய் இன்று (ஜூன் 1) முதன்முறையாக திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு முன்பாக முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.

நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசிய தவெக அமைச்சர் என். ஆனந்த், மக்கள் மத்தியில் தனது நெகிழ்ச்சியான நன்றியினைப் பகிர்ந்துகொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது:

"இன்று நான் உங்கள் முன்னிலையில் அமைச்சராக இங்கு நிற்பதற்குக் காரணம், நம்முடைய தலைவர் விஜய்க்காகப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களாகிய நீங்கள் அளித்த மதிப்புமிக்க வாக்குகள்தான். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்காக முழு மூச்சுடன் சேவையாற்ற எங்கள் அரசு எப்போதும் தயாராக இருக்கிறது."

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற இந்த முதல் அதிகாரப்பூர்வ திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் எழுச்சியோடு நிறைவடைந்தது.