மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 2) காலை வினாடிக்கு 1,854 கன அடியாகக் குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,339 கன அடியிலிருந்து 1,854 கன அடியாக சரிந்தது. அதேவேளையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதன்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.45 அடியிலிருந்து 75.62 அடியாகக் குறைந்துள்ளது.

தற்போது அணையின் நீர் இருப்பு 37.73 டி.எம்.சி.யாக (TMC) உள்ளது.