மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தூய்மைப் பணியாளரிடம் சாதிய பாகுபாடு காட்டிய புகாரில், கம்பூர் ஊராட்சி செயலர் ரூபா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் சசிகலா என்பவர், ஊராட்சி செயலர் ரூபா தன்மீது சாதி பாகுபாடு காட்டுவதாகக் கூறி புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, ஊராட்சி செயலர் ரூபா அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு தகவல்

இந்த நடவடிக்கை குறித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“வன்கொடுமை புகார் மீது நடவடிக்கை!

சாதி பாகுபாடுடன் தாம் நடத்தப்படுவதாக ஊராட்சி செயலர் மீது, தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், நமது துறையின் அறிவுறுத்தலின்பேரில் ஊராட்சி செயலர் இன்று (செப். 7) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய காலங்கள்போல் அல்லாமல், சாதி பாகுபாடுகளை எந்த வகையிலும் அனுமதிக்காமல், நமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”

என அவர் பதிவிட்டுள்ளார்.