பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் கிரிசில்டா, தனது மகனைக் கவனித்துக் கொள்வதற்காகப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையும் சுமுக முடிவும் கடந்த ஆண்டு நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த புகாரைத் தொடர்ந்து, குழந்தைக்குத் தந்தை யார் என்ற விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அக்குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, தனது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா மற்றும் மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் மகனுக்கு மொட்டை அடித்து, அவரது எதிர்காலப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

பிக்பாஸ் வாய்ப்பு நிராகரிப்பு இந்நிலையில், ஜாய் கிரிசில்டா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜாய் கிரிசில்டா:

"என் மகனை நேரில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே 'பிக்பாஸ் சீசன் 10' வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எனது குழந்தைக்குத்தான் எப்போதுமே முதல் முக்கியத்துவம் கொடுப்பேன்."

எனத் தெரிவித்துள்ளார்.