கோலிவுட்டின் முன்னணி நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. 2024 செப்டம்பர் மாதம் தனது விவாகரத்து முடிவை ரவி அறிவித்ததில் இருந்தே, பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
சமீபத்தில் ரவியும் ஆர்த்தியும் ஒன்றாகக் கோயிலுக்குச் சென்றதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதங்கள் எழ, தற்போது பாடகி கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவும், நடிகர் ரவியின் உருக்கமான பேட்டியும் இந்த விவகாரத்தை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளன.
தனக்கும் ரவி மோகனுக்கும் இடையே உள்ள உறவு குறித்து எழுந்த தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது
"இனிமேல் ரவி மோகனுக்காக நான் போராடப்போவதில்லை. நான் சென்னையை விட்டு வெளியேறுகிறேன். சமூக வலைதளப் பக்கங்களுக்கு வந்தாலே எதிர்மறையான கருத்துகள் என்னை மூழ்கடிக்கின்றன.
இறுதியாக, 'பெண்ணியம் வென்றது; மகிழ்ச்சி தோற்றது'. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவரும் இந்தச் சூழ்நிலையில் எனக்குத் தேவைப்படும் தனியுரிமையை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."
ரவி மோகன் உடனான தனது காதலை முறித்துக் கொள்வதை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையிலேயே கெனிஷா இப்பதிவை இட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், இந்த விவகாரங்கள் குறித்து நடிகர் ரவி மோகன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பதிலளித்துள்ளார்.
என்னுடைய சொந்தப் பிள்ளைகளை என்னைப் பார்க்க விடுவதில்லை. அவர்கள் எப்போதும் பாதுகாவலர்களுடனே (Bouncers) வருகிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே என்னை மிரட்டித்தான் இந்தத் திருமணமே நடத்தப்பட்டது. அவர்கள் என்னுடைய பணத்தை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், நானோ இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்."
கடந்த 23 ஆண்டுகளாக இரவு பகலாக உழைத்திருக்கிறேன். நான் நடித்ததில் 95 சதவீத படங்கள் வெற்றிப் படங்கள். இதை நானே பெருமையாகச் சொல்வதில் கவலையில்லை, ஏெனில் இது எனது கடின உழைப்பால் வந்தது. இவ்வளவு ஆண்டுகள் அமைதியாக இருந்ததே நான் செய்த தவறு."
தொடர்ந்து பேசிய அவர், பெண்ணியம் என்ற பெயரில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களைச் சாடினார். "இப்போது எல்லாரும் பெண்ணியம் பற்றிப் பேசுகிறார்கள். பெண்ணியம் என்றால் என்னவென்று யாருக்காவது புரிகிறதா? நான் பெண்களுக்கு ஆதரவாகவும், வன்முறைக்கு எதிராகவும் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன். பெண்களின் உரிமைக்காக நின்ற நான், எப்படி ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ளாமல் இருப்பேன்? 'பேராண்மை' படத்தில் நான் பேசிய வசனங்களை இன்றும் மக்கள் நினைவில் வைத்துள்ளனர்," என்று குறிப்பிட்டார்.
"இனிமேலும் நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. முன்னாள் மனைவி ஆர்த்தியிடமிருந்து எனக்கு முழுமையாக விவாகரத்து கிடைக்கும் வரை நான் எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை." — நடிகர் ரவி மோகன்





