நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு மூன்று முக்கிய நபர்களைக் கைது செய்துள்ளனர்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் முழு நீளக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்துப் படக்குழு அளித்த புகாரின் பேரில், டிஜிட்டல் தடயங்களை வைத்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
வேறொரு திரைப்படத்தின் காணொளி செம்மைப்படுத்துனராக (Editor) பணியாற்றும் ஒருவரே இந்தத் திருட்டில் மூளையாகச் செயல்பட்டுள்ளார்.
'ஜனநாயகன்' படத்தின் படத்தொகுப்பு (Editing) பணிகள் நடைபெற்ற கலையகத்திற்குள் (Studio) அத்துமீறி நுழைந்த அந்த நபர், அங்கிருந்த தரவுகளை ரகசியமாகத் திருடியது விசாரணையில் உறுதியானது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய அந்த எடிட்டர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கசிந்ததால் தயாரிப்புத் தரப்பு மிகுந்த கவலையில் இருந்தது. இந்நிலையில், காவல்துறையினரின் இந்த மின்னல் வேக அதிரடி கைது நடவடிக்கை விஜய் ரசிகர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

