இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி $47 பில்லியனை கடந்தது தமிழ்நாடு முன்னணியில் – ஐபோன் உற்பத்தி முக்கிய காரணம்
24 Tamil News
reporter

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி $47 பில்லியனை கடந்தது
தமிழ்நாடு முன்னணியில் – ஐபோன் உற்பத்தி முக்கிய காரணம்
புதுடெல்லி, ஜனவரி 18:
இந்தியா தனது எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முதல் முறையாக $47 பில்லியன் (ரூ.4.15 லட்சம் கோடி) என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் கடந்த 12 மாதங்களில் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
முந்தைய ஆண்டு 2024-இல் பதிவான $34.93 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இது 37 சதவீத வளர்ச்சியாகும். இந்த அதிவேக வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதே குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு – எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியின் மையம்
இந்த வளர்ச்சியில், தமிழ்நாடு இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி தொழிற்சாலைகள், ஏற்றுமதி உயர்விற்கு முக்கிய காரணமாக உள்ளன.
மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் சுமார் $30 பில்லியன் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியிலிருந்து கிடைத்துள்ள நிலையில், அதில் பெரும் பகுதி தமிழ்நாட்டிலுள்ள ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து வந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன் ஏற்றுமதி – தமிழ்நாட்டின் சாதனை
2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து $22 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் செயல்படும் ஆப்பிள் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் நிகழ்ந்துள்ளது.
இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் , ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஐபோன் ஏற்றுமதி பெற்றுள்ளது.




