தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இதயம் முரளி’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக படத்தின் மீதான சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில், ‘இதயம் முரளி’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நாளை (ஜூலை 4) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) கைப்பற்றியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.





