எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பெட்ரோல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக தளர்வுகளை மேற்கொள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தில் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்:

  • QR குறியீடு நீக்கம்: பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு QR குறியீடு (National Fuel Pass) அவசியமில்லை.

  • இந்த சலுகை இன்று (ஏப்ரல் 11) நள்ளிரவு முதல் ஏப்ரல் 18ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரமே அமுலில் இருக்கும்.

QR குறியீடு நீக்கப்பட்டாலும், எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பயணத் தேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் (ஒற்றை/இரட்டை) எரிபொருள் வழங்கும் முறைமை கட்டாயம் பின்பற்றப்படும்."

அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணியாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.