ஜப்பானின் ஐய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பதக்கம் வென்று சாதனை:
ஜப்பானில் செப்டம்பர் 19 அன்று கோலாகலமாகத் தொடங்கிய இப்போட்டியின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி:
இளவேனிலின் இந்த சிறப்பான வெற்றியைப் பாராட்டி பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து நமக்கு பெருமை சேர்க்கிறார்கள்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள். இது அவர் இன்று வென்ற இரண்டாவது பதக்கம் என்பது இந்த வெற்றியை இன்னும் சிறப்பானதாக்குகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்"
எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இப்போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த பிரதமர், வீரர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டி, அவர்கள் மீது இந்தியா பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.





