இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ், அப்படம் ஒரு 'மாஸ்டர் பீஸ்' எனப் பாராட்டித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள 'டோரதி' படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990-களின் காலகட்டத்தில் மதுர பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.
இசைஞானியின் ருத்ரதாண்டவம்:
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'கல்யாண விருந்து' உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 'டோரதி' திரைப்படம் நாளை (செப். 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இப்படத்தைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
தனுஷின் எக்ஸ் பதிவு:
"டோரதி - கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ். இது மிகவும் துணிச்சலான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு படம். இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா அவர்களின் இசை உங்களை மிரளவைக்கும்; இது அவரது 'ருத்ரதாண்டவம்' என்றே சொல்லலாம்.
நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்!" எனத் தனுஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.





