ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் சிறப்புப் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டினார்.
வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி பரிசுத் தொகை
கோவையைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
400 மீட்டர் தொடரோட்டம்: ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் 400 மீட்டர் தொடரோட்டப் பிரிவில் இறுதிப் தருணத்தில் அபாரமாக ஓடி இந்தியாவுக்குத் தங்கம் வென்று கொடுத்தார்.
கலப்பு 400 மீட்டர் தொடரோட்டம்: இப்போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
42 ஆண்டு கால சாதனை முறியடிப்பு: 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து, இந்திய தடகளப் புயல் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரவு விருந்து உபசரிப்பு
பதக்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளின் உழைப்பையும் சாதனைகளையும் கௌரவிக்கும் விதமாக ஊக்கத்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் சிறப்பு இரவு விருந்தும் அளிக்கப்படவுள்ளது.





