தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தைக் கலக்கிய நடிகை த்ரிஷா, இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய விடியோ ஒன்று ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக விஜய்யின் பிறந்தநாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து வந்த த்ரிஷா, இந்த முறை பிறந்தநாள் அன்று எந்தப் பதிவும் வெளியிடாததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் நேற்றிரவு த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடி சர்ப்ரைஸ் ஒன்றை அளித்தார். முதல்வர் விஜய் விதவிதமான 5 வகையான கேக்குகளை வெட்டிப் பிறந்தநாளைக் கொண்டாடும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தப் புகைப்படம் 50 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைக் குவித்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.
புகைப்படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இன்று த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் (Story) பகிர்ந்துள்ள ஒரு புகைப்படமும், விடியோவும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
முதல் பதிவு (புகைப்படம்): ஒரு அழகிய ஜன்னல் வழியே வானில் மேகங்கள் திரண்டு வரும் ரம்மியமான காட்சி. இன்னும் சற்று நேரத்தில் மழை பொழியப் போகிறது என்பதை உணர்த்தும் அந்தப் புகைப்படத்துடன், பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பெற்ற ‘முன்பே வா, என் அன்பே வா’ என்ற காதல் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பதிவு (விடியோ): அதே ஜன்னல் காட்சி, ஆனால் இப்போது மேகங்கள் ஒன்று கூடி பலத்த மழை பொழிகிறது. இந்த விடியோவில் பாடல் ஏதும் இல்லாமல், இயற்கையான மழையின் சப்தம் மட்டுமே ஒலிக்கிறது.
குறிப்பாக, அந்த விடியோவில் அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் (Swimming Pool) மழைத்துளிகள் விழுந்து அதிர்வுகளை ஏற்படுத்துவதை த்ரிஷா 'ஜூம்' (Zoom) செய்து காட்டியுள்ளார்.
காட்சிகளைப் பார்க்கும்போது அது ஏதேனும் ஒரு சொகுசு நட்சத்திர விடுதி அல்லது விஐபி விருந்தினர் விடுதி போலத் தோன்றுகிறது. ஆனால், இந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த எந்தத் தகவலையும் த்ரிஷா குறிப்பிடவில்லை.
அதே நேரத்தில், த்ரிஷா பகிர்ந்துள்ள ‘முன்பே வா.. அன்பே வா..’ பாடலைக் கேட்கும் ரசிகர்கள், இந்த பதிவின் மூலம் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற கேள்விகளுடனும் கமெண்டுகளுடனும் சமூக வலைத்தளங்களை தற்போதைக்கு ஆக்கிரமித்து வருகின்றனர்.





