மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படம், ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று மாபெரும் வணிக வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.
வசூல் சாதனை கடந்த ஜூலை 24-ஆம் தேதி தெலுங்கில் முழுநீளக் காதல் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரசிகர்களின் ஆதரவால் திரையரங்குகளில் காட்சி எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர், நடிகையரின் கலக்கல் நடிப்பு இப்படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் மற்றும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழில் 'மாடர்ன் லவ் சென்னை' இணையத் தொடர் மற்றும் 'லவ்வர்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கௌரி ப்ரியா, தற்போது தெலுங்கு திரை உலகிலும் 'சென்னை லவ் ஸ்டோரி' மூலம் மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளார்.திரைப்பயணம் தொடர்கிறது! இளைஞர்களையும் காதல் கதைகளை விரும்புபவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ள 'சென்னை லவ் ஸ்டோரி', திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு நல்ல வசூல் ஈட்டி வருகிறது.





