இன்றைய இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்வாட்ச்கள் முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக தற்போது 'ஸ்மார்ட்ரிங்' (மின்சார மோதிரம்) பயன்பாடு இளம் தலைமுறையினரிடையே வேகமாகக் பரவி வருகிறது. அந்த வகையில் பிரபல நுகர்வோர் மின்னணு நிறுவனமான போட் (boAt), தனது புதிய 'ஆக்டிவ் பிளஸ்' (Active Plus) ஸ்மார்ட்ரிங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை மற்றும் சலுகை விபரம்:
இந்த ஸ்மார்ட்ரிங்கின் உண்மை விலை ரூ. 9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது அமேசான் இணையதள விற்பனையில் ரூ. 2,220 என்ற சிறப்பு ஆஃபர் விலையில் கிடைக்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
உடல்நல கண்காணிப்பு: இதயத் துடிப்பு, மூச்சுத் திறன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு (SpO2) மற்றும் தூக்கத்தின் தரம் உள்ளிட்ட தினசரி செயல்பாடுகளை மிகத் துல்லியமாக கணக்கிடக்கூடிய நுண்ணிய சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
வெப்பநிலை எச்சரிக்கை: உடலின் வெப்பநிலையைக் கண்காணித்து, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி கொண்டது. மேலும் உடற்பயிற்சிக்கு பிந்தைய உடல் வெப்பநிலை மற்றும் இயல்பு வெப்பநிலையை ஒப்பீடு செய்து காட்டும்.
நீடித்து உழைக்கும் வடிவமைப்பு: துரு மற்றும் கீறல்கள் ஏற்படாத வண்ணம் உயர்தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தூசி மற்றும் வியர்வையால் பாதிக்கப்படாதவாறு இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.
நீண்ட பேட்டரி திறன்: வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் காந்த சார்ஜிங் (Magnetic Charging) தொழில் நுட்பம் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும்.
செயலி இணைப்பு: பயனர்கள் தங்கள் உடல்நலம் குறித்த அனைத்து தரவுகளையும் 'போட் கிரெஸ்ட்' (boAt Crest) மொபைல் செயலி மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்து கண்காணித்துக் கொள்ளலாம்.
நவீன தொழில் நுட்பமும், நேர்த்தியான வடிவமைப்பும் கொண்ட இந்த ஸ்மார்ட்ரிங், உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.





