தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத் தூண்களுள் ஒருவருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15) மாநிலம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் அவருடைய உருவச் சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமை தாங்கி அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே. பிரபு, சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர். குமார் ஆகியோர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாகப் பல தலைவர்களும் அண்ணாவின் நினைவுகளைப் போற்றித் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.





