இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு அதிவேக சேவையை வழங்கவும் அமேசான் நிறுவனம் தனது 'Amazon Now' திட்டத்தை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தியுள்ளது.

இந்த விரிவாக்கப் பணிகளுக்காக அமேசான் நிறுவனம் ரூ.2,800 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • விரிவாக்கம்: தற்போது மும்பை, டெல்லி, பெங்களூருவில் மட்டும் உள்ள இச்சேவை, விரைவில் சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே உள்ளிட்ட 100 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

  • விநியோக மையங்கள்: தடையற்ற சேவையை வழங்க நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட சிறு விநியோக சேவை மையங்கள் (Sub-delivery centers) பயன்படுத்தப்பட உள்ளன.

  • மின்னல் வேக டெலிவரி: மளிகை, காய்கறிகள், பழங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் என 1,000-க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்பு

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது

.

"சாதாரண வாடிக்கையாளர்களை விட, அமேசான் ப்ரைம் (Prime) உறுப்பினர்கள் இத்தகைய அதிவேக சேவையை மூன்று மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனை கருத்தில் கொண்டே இந்த அதிரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது." — அமேசான் நிறுவன அறிக்கை