தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் அதிகாலை வேளையில் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று பிறந்தநாள் காணும் த்ரிஷா, திருப்பதியில் நடைபெறும் மிகவும் விசேஷமான சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு ஏழுமலையானை வழிபட்டார். அதிகாலை வேளையில் நடைபெற்ற இந்த வழிபாட்டின் போது, அவர் பாரம்பரிய உடையில் எளிமையாகக் காணப்பட்டார்
த்ரிஷா கோயிலை விட்டு வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்
அப்போது, ’இன்று ரிசல்ட் பக்காவா நம்ம பக்கம்தான்’ என்று ரசிகர் ஒருவர் த்ரிஷாவைப் பார்த்து கூறிய நிலையில், அவர் சிரித்த முகத்துடன் நடந்து சென்றார்.

