தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவாகரத்து வழக்கு நாளை (ஏப்ரல் 20) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.

இரு தரப்பு வழக்கறிஞர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து கொள்வது எனச் சுமூகமான முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்நாள் ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சொத்துகளைப் பிரித்துக்கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பரப்புரைப் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, விஜய்யும் சங்கீதாவும் காணொளி காட்சி (Video Conference) மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராகத் திட்டமிட்டுள்ளனர்.

தங்களது வழக்கறிஞர்கள் மூலம் தேவையான மனுக்கள் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களைத் தாக்கல் செய்து, விவாகரத்து நடைமுறைகளைத் தொடர இருவரும் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில், அவரது குடும்பம் சார்ந்த இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.