அமெரிக்காவின் ஒரிகான் மாகாண தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரைக் கொன்ற 16 வயது சிறுவனுக்கு, அவரது தாயாரே துப்பாக்கியைப் பரிசளித்திருந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ பின்னணி: ஒரிகான் மாகாணத்தில் உள்ள சில்வர் ரயில் தொடக்கப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை (அக். 15) கிரிஃபின் ஜான் (16) என்ற சிறுவன் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அங்கு விரைந்த கெய்லப் கியாமன்கோ (36) என்ற நபர், தாக்குதல் நடத்திய சிறுவன் கிரிஃபின் ஜானைச் சுட்டுக்கொன்றார்.
கெய்லபின் இரண்டு மகள்களும் தாக்குதல் நடைபெற்ற அதே பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.தாயார் வாங்கித் தந்த துப்பாக்கி: இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், தாக்குதலில் ஈடுபட்ட கிரிஃபின் ஜானுக்கு அவரது தாயாரான ஷான்டை நிக்கர்சன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி ஒன்றை வாங்கிப் பரிசளித்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.விசாரணை தீவிரமடைவு: தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. மன அழுத்தம் காரணமா?அல்லது இனவெறித் தாக்குதலா?என்ற பல்வேறு கோணங்களில் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவில் நடப்பு 2026 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்பட்ட 28-ஆவது படுகொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.





