தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, 72 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வர் உட்பட மொத்தம் 35 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாததால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
வனத்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 25 இடங்கள் காலியாக இருந்த நிலையில், கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மீதமுள்ள 25 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அரசமைப்புச் சட்டத்தின்படி தமிழக அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை மட்டுமே நியமிக்கப்பட முடியும் என்ற நிலையில், தற்போது 35 இடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. இதில் தவெக சார்பில் 31 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும், விசிக மற்றும் ஐயூஎம்எல் சார்பில் தலா ஒருவரும் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 1952-ல் ராஜாஜி தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சிக்குப் பிறகு, 72 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மீண்டும் ஒரு கூட்டணி அரசு அமைந்துள்ளது. அதேபோல், 1967-க்குப் பிறகு சுமார் 59 ஆண்டுகள் கழித்து தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செ.ராஜேஷ் குமார் மற்றும் பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சி. ஜோசப் விஜய் (பெரம்பூர்) - முதல்வர் பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், உள்துறை, காவல், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்
என். ஆனந்த் (தி.நகர்)ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை
கே.ஏ.செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்)வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்)பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
கே.ஜி.அருண்ராஜ் (திருச்செங்கோடு)மக்கள் நல்வாழ்வுத் துறை
பி.வெங்கடரமணன் (மயிலாப்பூர்)உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
ஆர்.நிர்மல் குமார் (திருப்பரங்குன்றம்)எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டம்
ராஜ்மோகன் (எழும்பூர்) பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம்
டி.கே.பிரபு (காரைக்குடி)இயற்கை வளங்கள்
எஸ்.கீர்த்தனா (சிவகாசி)தொழில்துறை
ஸ்ரீநாத் (தூத்துக்குடி) மீன்வளத் துறை
கமலி. எஸ் (அவிநாசி)கால்நடை வளர்ச்சித் துறை
சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்) பால்வளத் துறை
ஆர்.வி. ரஞ்சித் குமார் (காஞ்சிபுரம்)வனத் துறை
வினோத் (கும்பகோணம்)வேளாண் மற்றும் உழவர் நலத் துறை
ராஜீவ் (திருவாடானை)சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்
பி. ராஜ்குமார் (கடலூர்)வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை
வி. காந்திராஜ் (அரக்கோணம்)கூட்டுறவுத் துறை
மதன் ராஜா. பி (ஓட்டப்பிடாரம்) சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை
ஜெகதீஸ்வரி. கே (ராஜபாளையம்) சமூக நலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
ராஜேஷ் குமார். எஸ் (கிள்ளியூர்)சுற்றுலாத் துறை
எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை
லோகேஷ் தமிழ்செல்வன். டி (ராசிபுரம்)வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
விஜய் தமிழன் பார்த்திபன். ஏ (சேலம் தெற்கு)போக்குவரத்துத் துறை
ரமேஷ் (ஸ்ரீரங்கம்)இந்து சமய அறநிலையத் துறை
பி. விஸ்வநாதன் (மேலூர்)உயர்கல்வித் துறை
குமார். ஆர் (வேளச்சேரி)செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைத் துறை
தென்னரசு. கே (ஸ்ரீபெரும்புதூர்)அயலக வாழ் தமிழர்கள் நலத் துறை
வி. சம்பத் குமார் (கோயம்புத்தூர் வடக்கு) பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
முகமது ஃபர்வாஸ். ஜெ (அறந்தாங்கி)தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
டி. சரத்குமார் (தாம்பரம்) மனிதவள மேம்பாட்டுத் துறை
என். மரிய வில்சன் (டி.ஆர். நகர்)நிதி, திட்ட மற்றும் மேம்பாட்டுத் துறை
விக்னேஷ் கே (கிணத்துக்கடவு)மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை
வன்னி அரசு (திண்டிவனம்)ஆதிதிராவிடர் நலத் துறை
ஷாஜகான் (பாபநாசம்)சிறுபான்மையினர் நலத் துறை

