24 Tamil News
விளையாட்டு

'T-20' உலக கோப்பை அட்டவணை வெளியானது

24 Tamil News

reporter

'T-20' உலக கோப்பை அட்டவணை வெளியானது

இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை 10வது சீசன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-மார்ச் 8ல் நடக்கவுள்ளது. மொத்தம் 55 போட்டிகள் நடக்கும். இந்தியாவில் ஆமதாபாத், டில்லி, கோல்கட்டா, சென்னை, மும்பையில் போட்டிகள் நடக்க உள்ளன. ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் பைனல் நடக்கவுள்ளது.

மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.
இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.இதற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார்.

குழு A: இந்தியா, அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான்
குரூப் பி: ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன்
குரூப் சி: இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இத்தாலி, நேபாளம்
குழு D: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்